முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்று உயிரிழந்துள்ளது, வன விலங்கு காப்பகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டில் அழிந்துவரும் புலிகள் இனத்தை பாதுகாத்து வரும் இக்காபகத்தில், சிங்காரா வனப்பகுதியும் அடங்கும். நள்ளிரவில் இக்காப்பக பகுதியில் உள்ள பெண் புலி ஒன்றின் மீது சிலர் விஷத்தன்மை கொண்ட ஊசியை எய்துள்ளனர். இதன் காரணமாக அப்புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள சிங்காரா வனத்துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புலி உயிருக்கு போராடியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், தொடர்ந்து புலியின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]