ஷாங்காய்,
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் தற்போதைய நடப்பு சாம்பிய னான நடாலை வீழ்த்தி ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
சீனா தலைநகர் பெயிஜிங்கில் ஷாங்காய் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று இறுதி போட்டி நடைபெற்றது.
இன்றைய போட்டியில் தற்போதைய சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரமேல் நடாலுக்கும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடருக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இறுதியில், ரோஜர் பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெடரர் ஏற்கனவே ஒருமுறை ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். தற்போது இரண்டாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.