சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மறுதினம் (17ந்தேதி) மாலையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு வரும் 19 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.