சென்னை:

மிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி வருகிறது. அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

அரசின்  நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்றாக தமிழக அரசு பிரித்து வருகிறத. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியும் பிரிக்கப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தில் 37 மாவட்டங்கள் இருந்த நிலையில், சமீபத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என முதல்வர் அறிவித்து அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும், இந்த புதிய மாவட்டத்தில் இணையும் ஊர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம்…

மயிலாடுதுறை
பேரளம்
கும்பகோணம்
திருவிடைமருதூர்
திருநாகேஸ்வரம்
ஜெயம்கொண்டம்
அணைக்கரை
பந்தநல்லூர்
மணல்மேடு
வைத்தீஸ்வரன்கோவில்
சீர்காழி
கொள்ளிடம்
பூம்புகார்
தரங்கபாடி
பொறையார்
வேலம் புதுக்குடி
கொல்லுமாங்குடி
ஸ்ரீகண்டபுரம்
எஸ் புதூர்
குத்தாலம்
ஆடுதுறை
செம்பனார்கோவில்
மங்கைநல்லூர்
கோமல்

ஆகிய ஊர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெறுகிறது.

[youtube-feed feed=1]