நிதர்சனத்தை உணருங்கள் : ஐயப்பன் விரதம்

ஐயப்பன் விரதம் குறித்த “என் ஐயப்பன் ஏழைபங்காளன்” முகநூல் பக்க பதிவு

1.சைவ விரும்பி அல்ல பகவான் மாறாக உயிர் கொல்லாமையை விரும்புகிறான்

2.பெண்களை ஒதுக்குபவனா பகவான் மாறாகப் பெண்மையிலிருந்து ஆண்மையைத் தனித்துக் காட்டுபவன் பகவான்

3.நீங்கள் கொட்டும் பணத்தை அங்கீகரிப்பவனா பகவான் இல்லை உங்கள் வருகைக்காக ஆண்டுதோறும் காத்துநிற்பவன் பகவான்

4.ஆகமத்திற்கு உட்பட்டவனா பகவான் உங்கள் அன்பை உலகிற்கு உறுதி செய்பவனே பகவான்

5.குடும்பத்தை ஒதுக்கியவனா பகவான் குடும்பத்தைக் கையாளும் வித்தையைக் காட்டியவனே பகவான்

6.தண்டிக்கும் கடவுளா பகவான் மாறாகக் கண்டிக்கும் உரிமை கொண்டவன் பகவான்

7.நம் அனுபவத்தைக் காட்டும் இடமா சபரிமலை நம் அகங்காரத்தைத் தொலைக்கும் இடமே சபரிமலை

8.உங்கள் நெய்யை எதிர்பார்த்தா அமர்ந்திருக்கிறான் பகவான் உங்கள் ஆன்மாவை ரசிக்கவே அமர்ந்திருக்கிறான்

சபரிமலை வழிபாட்டில் அறிவியல் மற்றும் வாழ்வியலகளையே விரதமாகத் தந்தனர் முன்னோர் இன்று நாம் வாழ்வியலைத் தொலைத்து விட்டு வெறும் வழிமுறைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம் சுவாமி .

கேள்விகளில் ஒளிந்திருக்கும் நான் அதைச் சாப்பிடலாமா இதைச் சாப்பிடலாமா அதைச் செய்யலாமா இதைச் செய்யலாமா என்ற வரிகளில் ஒருவருடைய தனிப்பட்ட நிலையினுடைய சந்தேகம் தான் தெரிகிறதே தவிர மாலையணிந்த தத்வமஸி ரூபங்கள் மறைந்தே போகிறது. கேள்வி கேட்கும் முன்பு நீங்கள் செய்யவிருப்பது பகவானுக்காக என யோசியுங்கள் பிறகு நீங்களே தீர்மானிப்பீர்கள் எது சரி தவறு என.

பகவான் சரணம்