டில்லி

பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் விளம்பரம் வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

முகநூல் அரசியல் விளம்பரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடுவதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது.  மேலும்  குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.  எனவே இது குறித்து தகவல் தொழில் நுட்ப துறைக்கான நாடளுமன்ற நிலை குழு முகநூல் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டது.

முகநூல் நிர்வாக பிரதிநிதிகள், ”நாங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் கொள்ளை வகுக்கப்பட்டு செயல்படுத்லொரோம். நிறுவனம் இதில் தலையிடுவதில்லை. நாங்கள் விளம்பரம் வெளியிடுவதில் அரசியல், அரசியல் அல்லாத விபரங்கள் என்று வித்தியாசம் எதுவும் பார்ப்பதில்லை”எனத் தெரிவித்துள்ளனர்.

குழுவினர் முகநூல் பிரதிநிதிகளிடம் அல்ஜசீரா, தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ் நாளிதழில்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி எழுத்து பூர்வ விளக்கமளிக்கும் படகேட்டுக்கொண்டனர்.  தவிர  தனிநபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தியது குறித்தது சோபிஜாங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ள குற்ற சாட்டுகளுக்கும், தனிநபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்திய எழுத்து பூர்வ விளக்கமளிக்க நிலை குழு வலிறுத்திவருகிறது. விரைவில் நிலை குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.