லக்னோ,
அரசு விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமிய சிறுமி, அங்கு நடைபெற்ற போட்டியில் கீதையை ஒப்புவித்து பரிசை தட்டிச் சென்றார். இதற்காக அவரை இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்குவதாக உலமா அறிவித்து உள்ளார்.
உ.பி.மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற அரசு விழா ஒன்றில் முதல்வர் முன்னிலையில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்துகொண்ட மீரட்டை சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமியான ஆலியாகான் கிருஷ்ணன் போல் உடை அணிந்து கீதை குறித்து பேசினார். இதன் காரணமாக அவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்து.
இதன் காரணமாக அவரை இஸ்லாமில் இருந்து நீக்குவதாக தியோபந் தரூல் உளூம் அமைப்பின் உலமா பத்வா அளித்துள்ளார். அவரின் செய்கை இஸ்லாமியத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கிருஷ்ணர் போல் ஆடை அணிந்து கீதையை ஒப்புவித்ததற்காக அவருக்கு பத்வா கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலியாகான், கீதையை ஒப்புவித்ததாலேயோ, கிருஷ்ணர் போல் ஆடை அணிந்ததாலேயோ இஸ்லாமியத்திற்கு எதிரானவள் என்று பத்வா அளிக்கும் அளவிற்கு இஸ்லாமியம் மோசமான மதம் இல்லை, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.