சிதம்பரம்
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி சென்று விரலை வெட்டிய சம்பவம் சிதம்பர்ம பகுதியில் ப்ரப்ரப்பை ஏற்ப்டுத்தி உள்ளது.

சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜனின் மகன்
மணிகண்டன். பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பழனிச்சாமி என்பவரிடம் இவர் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் அந்த ரூ.6 லட்சத்திற்கு பதிலாக ரூ.67 லட்சத்தை கொடுக்குமாறு பழனிச்சாமி கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதைக் கொடுக்க முடியாத மணிகண்டன் மற்றும் நடராஜன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு இடம் மாறினர். ஆயினும் அவர்களை தொடர்ந்து தேடிவந்த பழனிச்சாமி இறுதியாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மணிகண்டனின் தந்தை நடராஜனை காரில் கடத்தி சீர்காழியில் இருந்து கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதிக்கு நடராஜனை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக கடலூர் முதுநகர் போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு நடராஜன் மற்றும் அவரை கடத்தி வந்த 5 பேரை பிடித்தனர். கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு அவர்கள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, அந்த கும்பல் நடராஜனை கடுமையாக தாக்கியதுடன் அவரது கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது.
தற்போது நடராஜனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிடிபட்டுள்ள 5 பேரிடமும் கடலூர் முதுநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் நடராஜனை இவர்கள் திமுக கொடி கட்டிய காரில் கடத்தி வந்ததும் தெரியவந்ததால் எதன் காரணமாக இவர்கள் திமுக கொடி கட்டிய வாகனத்தில் கடத்தி வந்தார்கள் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய சம்பவம் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.