போபால்:
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாட்டியா மாவட்டம் இக்யு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தாராம் பட்வா( வயது 25). இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை கொண்டாட உறவினர்களுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு நத்தாரம் ஏற்பாடு செய்தார்.

விழாவில் பலர் துப்பாக்கியால் சுட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது நந்தாராமின் உறவினர் திலிப் பட்வா சுட்ட துப்பாக்கியின் குண்டு 2 பேர் மீது பாய்ந்தது. நந்தாராமின் மீது குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்து சரிந்து விழுந்தார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நத்தாராம் உயிரிழந்தார். திலிப் பட்வாவை போலீசார் கைது செய்தனர்.
Patrikai.com official YouTube Channel