காஷ்மீர்

ரு இஸ்லாமிய ராணுவ வீரர் தன் ரம்ஜான் நோன்பையும் மறந்து கடமையில் ஈடுபட்டு இந்திய  மண்ணைக்  காத்து இருக்கிறார்

காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் இக்பால் அகமது.  சமீபத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் ரம்ஜான் விரதம் இருந்தார்.  ரம்ஜான் விரதம் இருக்கும் முஸ்லிம்கள் வழக்கப்படி அவர் தனது காலை உணவை உண்ண விடியற்காலை ஆரம்பித்த போது, அவரது ஒயர்லெஸ் கருவி ஓசையை எழுப்பியது.  தற்கொலைப் படை தாக்குதல் பற்றிய செய்தி கிடைத்தது. தனது உணவை மறந்து அவர் தன் சகாக்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.  தற்கொலைப்படையை அழித்து இந்திய மண்ணைக் காத்தார்

அகமது ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் நோன்பை தவறாமல் கடைபிடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது

மற்றொரு எல்லைக் காவல் வீரர் தெரிவிக்கையில் தற்கொலைப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததுமே அங்கிருந்த நாய்கள் விடாது குரைக்க ஆரம்பித்தன என்றும். அதனால் எச்சரிக்கை அடைந்த வீரர்கள் அருகிலிருந்த கமாண்டர் அகமதுக்கு உடனே தகவல் அனுப்ப முடிந்தது எனவும் கூறினார்

அந்த காவல் வீரர் தினமும் அந்த நாய்களுக்கு உணவளிப்பது வழக்கம்

அவர் தங்கள் அத்தனை உயிரையும் காப்பாற்றியது அந்த நாய்களே என கண்ணீருடன் கூறினார்