ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்துசெய்யப்பட்டபோது சிறைவைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவும் ஒமர் அப்துல்லாவும் 7 மாதங்கள் கழித்து சந்தித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் மோடி அரசால் துண்டாடப்பட்டவுடன், முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடம் சிறை வைக்கப்பட்டனர்.
மூத்த அரசியல்வாதியான பரூக் அப்துல்லா, பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டுச் சிறையில் பல மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், மிகச் சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட அவர், தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டுள்ள தன் மகன் ஒமர் அப்துல்லாவை காண அனுமதிக்குமாறு காஷ்மீர் நிர்வாகத்திடம் அனுமதி கோரவே, அனுமதி கிடைத்தது.
ஒமர் அப்துல்லா ஹரி நிவாஸ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அங்கு சென்ற பரூக் அபதுல்லா, தன் மகனை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசியதாகவும், அந்த சந்திப்பு உருக்கமானதாய் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.