டெல்லி: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி, காவல்துறையின் தடுப்புகளை மீறி விவாயிகளின் டிராக்டர்பேரணி நடைபெற்றது. அப்போது சில அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  வன்முறையில் ஈடுபட்டதாக நடிகர் தீப்சித் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்களின்  14 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. வரும் 6ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அவர்களை தடுக்கும் வகையில், சாலைகளில் முள்வேலிகள், ஆணிகள் பதிக்கப்பட்டு இருப்பதுடன், இரும்பு தகடுகள், பாராறங்கற்களைக்கெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில்,  ஜனவரி 26ந்தேதி அன்று,காவல்துறையினரின் தடுப்பை மீறி விவசாய சங்கங்களில் ஒறு அமைப்பினர் டெல்லி செங்கோட்டைக்குள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டனர்.  ஏராளமான போலீசார் படுகாயம் அடைந்தனர். பொதுச்சொத்துக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை அதிகாரி, தடுப்பை மீறி டெல்லிக்குள்  புகுந்த 80 டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், வன்முறையில் ஈடுபட்ட12 பேரின் தெளிவான புகைப்படங்கள் வீடியோ காட்சிகளில் இருந்து கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, வன்முறையில்  ஈடுபட்ட ஆகாஷ் பிரீத்சிங் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 123 பேரை  போலீசார் கைது செய்து இருப்பதாகவும்,  டெல்லி செங்கோட்டைக்குள் ஊடுருவிய விவசாயிகளின் 14 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் , இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும், விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது,  அதை செங்கோட்டை நோக்கி  திருப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர்,

நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.