டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த  மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாய சங்கத்தினர்  அறிவித்து உள்ளனர்.

விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி என்ற பேரணியைத் துவக்கி நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பின்புலமாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்தியஅரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த, 2020 – 2021ல் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாள் நீடித்ததால், அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து, தற்போதைய போராட்டத்தை தடுக்கும் வகையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  ஹரியானாவுக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி, பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என, தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், பஞ்சாப் – ஹரியானா எல்லையிலேயே விவசாயிகள் முகாமிட்டிருந்தனர்.

கடந்த போராட்டத்தைப் போல, டிராக்டர்கள் மற்றும் பஸ்கள், வேன்கள் என, பலவகையான வாகனங்களில் விவசாயிகள் பேரணியாக வந்தனர். அடுத்த சில மாதங்களுக்கு தேவையான சமையல் பொருட்களையும் எடுத்து வந்தனர். போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதற்காக மத்திய அரசு சார்பில், பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் அடங்கிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன், நான்கு சுற்று பேச்சு நடத்தினர்.

மத்திய அரசு பல திட்டங்களை தெரிவித்தும், விவசாய சங்கத்தினர்  அதற்கு  பிடிகொடுக்காமல், போராட்டத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ச இரும்பு தடுப்புகள், முக கவசம், பீரங்கிபோல் மாற்றியமைக்கப்பட்ட டிராக்டர், அதிகசக்தி உடைய புல்டோசர்கள் என, போருக்கு செல்வது போல், பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி தங்கள் பேரணியை தொடர்ந்து வருகின்றனர். இது நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து போராட்டக்காரர்களை கலைப்பதாக ,அரியானா போலீசார், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,  2 நாள் போராட்டத்தை நிறுத்தி வைத்த விவசாயிகள், அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர்,   “அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்” என்றார். போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்