சென்னை: விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை  உடனே பத்திரப்படுத்துங்கள், கனமழை காத்திருக்கிறது என  டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் அலர்ட் கொடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று (09.01.2026) இரவு முதல் (12.01.2026) இரவு வரை பரவலாக விட்டு விட்டு கனமழை பதிவாகும் என தெரிவித்துள்ள டெல்டா வெதர்மேன், ஜனவரி 10,11 ஆகிய தேதிகளில் அதித கனமழையாக அதிக பட்சம் 20 செ.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக  திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரையிலான கடலோர மாவட்ட விவசாயிகள்  அறுவடை செய்த தானியங்களை உடனடியாக பத்திரப்படுத்திவிட்டு, ஜனவ 12ம்தேதி வரை அனைத்து வேளாண் பணிகளையும் ஒத்திவைப்பது நல்லது. குறிப்பாக அதித எச்சரிக்கை தேவை எனவும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எப்போதும் இல்லாத வகையில்,  தற்போது புயல் உருவாகி உள்ளது.  அந்த வகையில் வங்க்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்ககடலில் நிலவக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட இலங்கை கடல்பகுதியை அடையக்கூடும் என தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (09.01.2026) இரவு முதல் (12.01.2026) இரவு வரை பரவலாக விட்டு விட்டு கனமழை பதிவாகும். நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் ஜனவ 10,11 ஆகிய தேதிகளில் அதித கனமழையாக 20 செ.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் நாளை (10.01.2026) காலை முதல் மழை துவங்கி (12.01.2026) வரை நீடிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையாக 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள் மாவட்டங்கள் & மேற்கு மாவட்டங்களில் ஜனவ 11 & 12 ஆகிய தேதிகளில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம். தென் மாவட்டங்களில் ஜனவ 12 & 13 தேதிகளில் பரவலாக கனமழை வாய்ப்பு. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை ஜனவ 12,13 தேதிகளில் பதிவாக வாய்ப்பு. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

அறுவடை செய்த தானியங்களை உடனடியாக பத்திரப்படுத்திவிட்டு, ஜனவ 12ம் தேதி வரை அனைத்து வேளாண் பணிகளையும் ஒத்திவைப்பது நல்லது. குறிப்பாக திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரையிலான கடலோர மாவட்ட விவசாயிகள் அதித எச்சரிக்கை தேவை எனவும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]