மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து தொடர்ந்து போராடும் விவசாயிகள்

Must read

டில்லி

த்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு உள்ளது. டில்லி – அரியானா சாலையில் நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசுடன் இவர்களின் பிரதிநிதிகள் 5 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.  மத்திய அரசு வேளான் சட்டத்தைத் திரும்பப் பெற பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நேற்று இரவு விவசாய பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தும் போது வேளான் சட்டங்களில் திருத்தம் அமைக்கவும் அதனை எழுத்துப் பூர்வமாக அறிவிக்கும் முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் பரிந்துரைகள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன.   விவசாய சங்கங்கள் இதனைப் பரிசீலனை செய்து பிறகு நிராகரித்துள்ளன,

திருத்தங்களுக்கு பிறகும் பழைய சட்டம் தொடர்வதாகவும் அதையே அரசு திரும்ப அளித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.  இந்த போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் இதற்காக அனைத்து விவசாயிகளும் டில்லியில் ஒன்று கூட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article