டில்லி:
தலைநகர் டில்லியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்த பகுதியை சேர்ந்த மக்கள் இன்று 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லி நொய்டா நேரடி விமான சேவை நடைபெறும் விமான வழித்தடத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
விமான நிலைய விரிவாக்கத்தக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகையை கோரி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களும் களமிறங்கி உள்ளனர். அவர்கள் தலைமையில்,சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய போராட்டத்தை தொடர்ந்து, விவசாயிகள் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பு காரணமாக டில்லியில் கடுமையான போக்குவரத்தை பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது. . விவசாயிகள் தங்கள் நிலங்களை கையகப்படுத்தியதற்கு நான்கு மடங்கு இழப்பீடு கோரி வருகின்றனர்.