டெல்லியில் போராடும் விவசாயிகள் பத்திரிகை தொடங்கினர்….
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுமார் 3 லட்சம் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் ’’TROLLEY TIMES’’ என்ற பத்திரிகையை ஆரம்பித்துள்ளனர்.
வாரம் இருமுறை குருமிகி மொழியில் வெளியாகும் இந்த பத்திரிகையின் முதல் இதழ் சனிக்கிழமை வெளிவந்தது.
விவசாயிகள் போராட்டம் குறித்த கட்டுரைகள்,போட்டோக்கள், பேட்டிகள் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
முதல் பக்கத்தில் ‘’ ஒன்று படுங்கள்.. போராடுவோம். வெற்றி பெறுவோம்’’ என்ற வாசகம் காணப்படுகிறது.
குர்கான் என்ற இடத்தில் 2 ஆயிரம் இதழ்கள் முதல் கட்டமாக அச்சிடப்பட்டுள்ளன.
இதற்கு 11 ஆயிரம் ரூபாய் செலவு ஆனதாக தெரிவித்த விவசாயிகள்,’’ அடுத்த தலைமுறைக்காக போராடும் எங்களை தீவிரவாதிகள் என சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். எங்கள் போராட்டம் குறித்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல இந்த பத்திரிகையை நடத்துகிறோம்’’ என்று மேலும் கூறினர்.
-பா.பாரதி.