சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர்
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுல்தான் பேட்டை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று 17-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமாயிலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், மாவட்டச் செயலாளர் வேலு மந்திராச்சலம், வழக்குரைஞர் பிரபாகரன், இனாம் நில விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கனகராஜ், ரகுராம், சுல்தான் பேட்டை ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் சவுந்தரராஜன், மூங்கில் தொழுவு பொதுமக்கள் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.