டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில்   போராட்டம் நடத்தி வரும் விவிவசாயிகள் போராட்டம்  இன்று 5வது நாளாக தொடர்கிறது.

போராடும் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபோது ஒருவர் உயிரிழந்த நிலையில், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாக விவசாய சங்கத்தின் தெரிவித்துள்ளனர்.

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடே தயாராகிக்கொண்டிருக்கும் நேரத்தில்  பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ 2.0’ போராட்டம் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த போராட்டத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பின்புலத்தில் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், விவசாய சங்க தலைவர் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகள்  , டெல்லியை நோக்கி டிராக்டர்களில் மீண்டும் படையெடுக்கத் தொடங்கி யிருக்கிறார்கள் விவசாயிகள். எக்காரணம் கொண்டும் அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடக் கூடாது எனத் தடைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.  டெல்லியை நோக்கி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் பெல்லட் குண்டுகளால் தாக்குதல் நடத்தி வருகின்றனர் போலீசார்.

இதற்கிடையில், போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தங்களது பிடிவாதத்தை மறுத்து விவசாயிகள் போராடி வருவது பொதுமக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்  இன்று 5வது நாளாக  விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை விவசாயிகள் கலைந்துசெல்ல காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில்,  விவசாயிகள் போராட்டம் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அரியானா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஹிராலால் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவரின் உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்தார்.  இதையடுத்து, அவரை மீட்ட சக போலீசார் அம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹிராலாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக   டெல்லிவாசிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.