புதுடெல்லி:
டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு தினங்களுக்கு முன் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 96 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.