டில்லி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு  நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தலைநகர் டில்லியில் தொடர்ந்து 44 நாட்களாக விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து 7 கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் சமரசம் ஏற்படாததால் இன்று 8 ஆம், கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

இந்த 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  அரசு தனது போக்கில் பிடிவாதமாக உள்ளதாக விவசாயிகள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் எஅன் விவசாயிகள் தரப்பு வலியுறுத்தி உள்ளது..

ஆனால் அரசு தரப்பில் இந்த விவாதத்தை வேண்டுமென்றே தாமதிப்பதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் குறை கூறி உள்ளனர்.  இதையடுத்து வரும் 15 ஆம், தேதி அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற உள்ளன.   இந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர்.