டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம்  இன்று 72வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் இன்று விவசாயிகளை போராட்டக்கள்ததில் சந்திக்க உள்ளார்கள். இந்த குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பியும் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது 72வது நாளை எட்டி உள்ளது. இதற்கிடையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்த,  உச்சநீதி மன்றம்  இடைக்கால தடை விதித்து, இந்த சட்டம் குறித்து ஆராய, 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் இருந்து ஒருவர் விலகி உள்ள நிலையில், குழுவினரை ஏற்க  விவசாயிகள் மறுத்து விட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

“வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்றும், வேறு எந்த சலுகைகளையும் பெற நாங்கள் தயாராக இல்லை, தங்களின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தயார் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது. அவர்கள் பிரச்சனையை கேட்டறிய டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் துரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும்  போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளை இனறு சந்தித்து பேச உள்ளனர். அதற்காக அவர்கள் வாகனத்தில் காசியாபா;j  நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து வெங்கடேசன் எம்.பி.  தனது டிவிட்டர் பக்கத்தில்,  விவசாயிகளின் போராட்டக்களமான காஜியாபாத் நோக்கி நாடாளுமன்ற குழுத்தலைவர்கள் சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.