ண்டிகர்,

விவசாயீகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவமர் மாதம் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட முக்கிய விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் சாகும்வரை  உண்ணாவிரதத்தை தொடங்கினார். 131 நாட்களுக்கு பிறகு அந்த போராட்டத்தை ஜக்ஜித் சிங் தல்லேவால் முடித்துக்கொண்டுள்ளார்.

ஜக்ஜித் சிங் தல்லேவால் பஞ்சாபில் எச்ஃப்செய்ஹ்ச் ஒடு நிகழ்ச்சியில்,

“நீங்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதத்தை முடிக்குமாறு என்னிடம் கேட்டுள்ளீர்கள். போராட்டத்தை கவனித்துக்கொண்டதற்கு நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்கள் உத்தரவை நான் ஏற்றுக்கொள்கிறேன்”

என்று கூறி  உண்ணாவிர போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஏற்கனவே மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,

“இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயத் தலைவர் ஸ்ரீ ஜக்ஜித் சிங் தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார்,  அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்”

என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ,