டில்லி,

லைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி நிவாரணம் , காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்திரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக,   மரத்தில் ஏறி போராட்டம், பாம்பு கறி, எலிக்கறி உண்ணும் போராட்டம், பாதி மொட்டை, பாதி மீசை மழிப்பு என பலவகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இன்று 24- வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இன்றறைய போராட்டத்தில் விவசாயிகள் பலர் முக்காடு அணிந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்காமல் முக்காடு போட்டதால் நாங்கள் இன்று முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சியினர், பல மாநில விவசாயிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வந்துள்ள நிலையில்,

இன்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தமிழக ஆம்ஆத்மி கட்சி தலைவர் வசீகரனோடு சந்தித்து ஆதரவு கோரினார்.

அப்போது, கெஜ்ரிவால், தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும், பிரதமரை சந்திக்குபோது தமிழக விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவேன் என்றும் கூறினார்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினோம். அவர் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக நிச்சயம் விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்து எடுத்துரைப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், பிரதமர் எங்களை எப்படியும் சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இல்லையென்றால் இங்கேயே சமாதி ஆகிவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.