புதுடெல்லி:
புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதியளித்தனர்.
இதையடுத்து கஞ்சவாலா சொவுக் – ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி துவங்கியது.டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்செயல்கள் நடக்க துவங்கின. பல இடங்களில் கண்ணீர்புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. காயமுற்றவர்கள் குறித்த விவரம் ஏதும் வெளிய வரவில்லை. டெல்லியில் மேலும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சச்சூழல் எழுந்துள்ளது.
இந்நிலையில், தடைகளை தாண்டி விவசாயிகளின் டிராக்டர் பேரணி, டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.