டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள், அதிகாரிகள் குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு அறிவுரை கூறி உள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும், மாநில எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.
இநத நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
மேலும் வழக்கு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்க டெல்லி, அரியானா அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.