டெல்லி: ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்க உள்ளோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று உள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். இது குறித்து டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெவ்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு முடிவு எடுக்க இருக்கிறோம். பின்னர் ஜனாதிபதியிடம் எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்றார்.