சென்னை; தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 10மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கிய நிலையில், 12மணிக்கு பட்ஜெட் முடிவடைந்தது. சுமார் 2மணி நேரம் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் பட்ஜெட் வாசிக்கப்பட்டது.
தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 2மணி நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் முற்பகல் 12மணி அளவில் நிறைவு பெற்றது. இதைடுத்து சபாநாயகர் சட்டப்பேரவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் வரும் 21ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சபை கூடும் என்றும் கூறினார்.
இன்யை பட்ஜெட்டில், வேளாண்துறைக்கு நடப்பாண்டு ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.231.9 கோடி அதிகம். அத்துடன் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ₹25.9 கோடி ஒதுக்கீடு
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது, தங்கள் பங்களிப்பு தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை
டெல்டா பகுதிகளில் பாசன கால்வாய்களை தூர்வார ₹80 கோடி நிதி ஒதுக்கீடு
நெல் அறுவடைக்குப் பின், பயறு வகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; இதன் மூலம் கூடுதலாக 13,000 மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்
வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளிக்கும்
நெல்லில் உற்பத்தி திறனை அதிகரிக்க, குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவுசெய்யும் புதிய தொழில்நுட்பம்
திருக்கடையூர் மாநில அரசு விதை பண்ணையில் குழிதட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து,250 ஏக்கரில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்படும்#முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ₹65.34 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 1 மணி நேரம் 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார். நாளை விடுமுறை என்பதால் சட்டமன்றம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.