சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் 4-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
உழவர்களை உச்சத்தில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசு என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களை மேற்கோள்காட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களின் மண் வளத்தை காக்க 22 இனங்களுடன் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்
பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு 2 இலட்சம் விவசாயிகள் பயனடைவர்..
2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு
“10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்”
2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்மூலம், ஒவ்வொரு கிராமும் தன்னிறைவு பெற்றிடும் வகையில், ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வி தை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக விரைவில் ஆய்வகம் அமைக்கப்படும்
வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ₹1 கோடி ஒதுக்கீடு!
வேளாண் பட்ஜெட் தொடர்பான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…