நாளுக்குநாள் பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறி வருகிறது. இந்த வாரம் ஆரி, அர்ச்சனா, சுரேஷ், சோம், அனிதா, சனம் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கின்றனர்.நேற்று பாலாஜிக்கு எதிராக சோம் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொன்ன விதம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக கேட்டும் ‘பப்பெட்’ என்னும் வார்த்தைக்கு பாலாஜி அர்த்தம் சொல்லாமல் இருப்பதாக சோம் குற்றஞ்சாட்டினார்.
இந்த வாரம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏகப்பட்ட குறும்படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனம்-பாலாஜி சண்டை, சோம்-பாலாஜி பிரச்சினை, ஆரி-பாலாஜி சண்டை என ஏகப்பட்ட சண்டைகள் இருக்கின்றன.
#Day32 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/WxVc2uI7az
— Vijay Television (@vijaytelevision) November 5, 2020
இந்நிலையில் மற்ற போட்டியாளர்கள் விளையாடி கொண்டிருக்க, ஷிவானி பாலாஜி இவர்கள் இருவர் மட்டும் வேறு உலகத்தில் ஏதோ ஒன்று பற்றி பேசிக் கொண்டிருக்கும் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பாலாஜி ஏற்கனவே “இது காதல் எல்லாம் இல்லை. ஒரு ஸ்டேட்டர்ஜி” என்று சுசித்ராவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
#Day32 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/GBiQ57rfyl
— Vijay Television (@vijaytelevision) November 5, 2020