ரேபரேலி:
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த வருகிறது. இதுவரை 1449 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராது பணியாற்றி வரும் மருத்துவர் கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சரியான உணவோ, கழிப்பிட வசதிகளோ இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
அந்த வீடியோவில், “அவர்கள் தூங்கும் வசதிக்காக பெரிய வகுப்பறைகளைக் கொண்ட ஒரு பள்ளி உள்ளது; ஒவ்வொரு அறையிலும் நான்கு படுக்கைகள் உள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட விதிகளுக்கு எதிரானது. மூச்சுத் திணறல் குறித்து நாங்கள் புகார் செய்தபோது, அவர்கள் ஒரு மொபைல் கழிப்பறையைக் கொண்டு வந்தார்கள்.
அந்த பள்ளியில் இரவில் மின்சாரம் இல்லை. ஒநேற்று இரவு எங்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது, இதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப் பட்டது, நான்கு பேர் ஒரே அறையில் தூங்குவது பாதுகாப்பானதா என்று மருத்துவர்கள் தங்கள் வீடியோக்களில் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பைஏற்படுத்தியது.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கான தரநிலைகள் இவைதானா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். நம்மில் ஒருவர் நோய்த்தொற்றுக்கு ஆளானால் நம் அனைவருக்கும் தொற்று ஏற்படாது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் மற்றொரு ரேபரேலி மருத்துவர்.
ஏற்கனவே இது தொடர்பாக அவர்கள் சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதால், தாங்கள் எங்களது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், எங்களுக்கு சரியான உணவோ, கழிப்பிட வசதிகளையோ அரசு செய்து தரவில்லை என்றும், தாங்கள் தங்குவதற்கு தகுந்த இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தினர்.
இதையடுத்து, அவர்கள் தங்குவதற்கு அருகில் உள்ள அரசு பள்ளி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு சரியான கழிப்பிட வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்றும், சரியான உணவுகளும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவர்கள், மற்றும் துணைமருத்துவர்கள், பணியாளர்களை அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து கூறியவர், ” மருத்துவர்கள் குற்றம் சாட்டிய அந்த அந்த இடத்தை நானே பரிசோதித்தேன், அங்கு சரியான வசதிகளை இல்லை. எனவே, . நிர்வாகத்தின் உதவியுடன் நாங்கள் அவர்களை அருகிலுள்ள விருந்தினர் மாளிகைக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு வாழ்க்கை நிலை அல்லது உணவு சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று கூறியவர், மருத்தவர்கள் முழு திருப்தியுடன் பணியாற்ற வேண்டும் என்றம், அங்கு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்கு ஒரு நேரடி சமையலறைக்கு ஏற்பாடு செய்கிறோம், எனவே மருத்துவர்கள் சூடான சமைத்த உணவைப் பெற முடியும் என்று தெரிவித்து உள்ளார்.