டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பல ரசிகர்களை கவர்ந்தார்.

இதன் பின் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரம்யா. இந்நிகழ்ச்சியில் சிங்கப் பெண் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர் ஒருவர் மிக உயரமான கட் அவுட் வைத்து அதற்கு பாலபிஷேகம் செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன.

 

[youtube-feed feed=1]