திருநெல்வேலி
சாகித்ய அகாடமி விருது பெற்றபிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் அடைந்தார்.
பிரபல எழுத்தாளரான தோப்பில் மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் என்னும் ஊரில் க்டந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் மனைவியின் பெயர் ஜலீலா மீரான் ஆகும். முகமது மீரான் 5 நாவல்களையும் 6 சிறுகதை தொகுப்புகளையும் எழுதி உள்ளார். எராளமான மொழி பெயர்ப்பு நூல்களையும் எழுதி உள்ளார்.
இவருடைய ’சாய்வு நாற்காலி’ என்னும் நாவலுக்கு 1977 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது. லில்லி தேவசிகாமணி விருது. தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தற்போது 74 வயதாகும் தோப்பில் முகமது மீரான் உடல் நலக் குறைவால் மரணம் அடிந்தார். வ்ரது உடல் நெல்லை வீரபாகு நகரில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முகமது மீரானின் உடல் நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.