மாண்டியா
பிரபல இளம் டிவி நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இளம் நடிகர் சுஷில் க்வுடா. இவர் நடித்த அந்தபுரா என்னும் கன்னட தொடர் மூலம் இவர் மக்களை மிகவும் கவர்ந்திருந்தார். தற்போது 30 வயதாகும் சுஷில் கவுடா உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வம் உள்ளவராகவும் பல இளைஞர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ள சலாகா என்னும் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் துனியா விஜய் கதாநாயகனக நடித்துள்ளார். நேற்று சுஷில் கவுடா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த செய்தி சின்னத் திரை மற்றும் திரையுலக வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தர்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சலாகா படத்தில் சுஷில் கவுடாவுடன் நடித்த துனியா விஜய், “நான் முதலில் சுஷில் கவுடாவை பார்த்தபோது நல்ல கதாநாயகனாக வ்ருவர் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்த படம் வெளி வரும்முன்பே அவர் ந்ம்மை விட்டு சென்று விட்டார். எத்தகைய பிரச்சினை இருந்தாலும் தற்கொலை ஒரு தீர்வு ஆகாது. இந்த ஆண்டு தொடர் மரணங்கள் நிகழ்கிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel