சென்னை

பிரபல தமிழ் நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம் அடைந்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான பிஜிலி ரமேஷ் முதலில் சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னர் நகைச்சுவை நடிகரானார், பிஜிலி ரமேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை  தொடர்ந்து அவர் மேலும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

திடீரென பிஜிலி ரமேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 5 மணிக்கு  நடிகர் பிஜிலி ரமேஷின் இறுதிச்சடங்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெற உள்ளது.