மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல ஆன்மிக பேச்சாளர், எழுத்தாளர், ஜோதிடர் திருமதி வேதா கோபாலன் சிவராத்திரி தொடர்பான பல்வேறு ஆன்மிக தகவல்களை பத்திரிகை டாட் காம் இணையதள நேயர்களுக்காக, வீடியோ வடிவில் விவரமாகவும், விளக்கமாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு சிவராத்தியானது, நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வருகிறது. அன்றைய தினம் உலக மகளிர் தினம் என்பது மேலும் சிறப்புகளை பெற்றுள்ளது. அத்துடன் நாளை (8ந்தேதி) பால்குனின் த்ரயோதசி திதியும், மகா சிவராத்திரியின் நிஷிதா முஹூர்த்தமும் ஒன்றிணைந்து நடக்கின்றன. இருப்பினும், சுக்ர பிரதோஷ விரதம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலையில் அனுசரிக்கப்படுகிறது.
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறப்பானதொரு விரதமாக போற்றப்படுவது, மகா சிவராத்திரி வைபவம்தான். அதனால்தான் மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும், நம் முன் ஜென்மப் பாவங்கள் எல்லாம் விலகும் என்கிறது சிவபுராணம். மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி பலன்களையும் புண்ணியங்களையும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இயலாதவர்கள், இரவுப் பொழுதில் எளிமையான, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளலாம். பின்னர் சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் படத்திற்கு தீப தூப ஆராதனை செலுத்தி வழிபட வேண்டும். தொடர்ந்து, மாலையில் மீண்டும் குளித்துவிட்டு, சிவபூஜையை இல்லத்தில் செய்ய வேண்டும். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவது மகத்துவம் மிக்கது.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு சிவராத்தியானது, நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வருகிறது. அன்றைய தினம் உலக மகளிர் தினம் என்பது மேலும் சிறப்புகளை பெற்றுள்ளது. அத்துடன் நாளை (8ந்தேதி) பால்குனின் த்ரயோதசி திதியும், மகா சிவராத்திரியின் நிஷிதா முஹூர்த்தமும் ஒன்றிணைந்து நடக்கின்றன. இருப்பினும், சுக்ர பிரதோஷ விரதம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலையில் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து நேயர்களுக்காக வீடியோ வடிவில் சிவராத்திரி குறித்த ஆன்மிக தகவல்களை திருமதி வேதா கோபாலன் அவர்கள் பகிர்ந்துள்ளார். வாசகர்கள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.