சபரிமலை
இறை இசைப் பாடகர் வீரமணி ராஜுவுக்கு சபரிமலை தேவஸ்தானம் ஹரிவராசனம் விருது வழங்குகிறது.

சபரிமலை கோவில் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் சபரிமலை சன்னிதானத்தில் பிரபல திரையிசை பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும்.
இது இந்த வாரியம் வழங்கும் உயரிய விருது எனக் கருதப்படுகிறது. இந்த வருடம் ஹரிவராசனம் விருதுக்கு இறை இசைப்பாடகர் வீரமணி ராஜு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இந்த தகவல் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹரிவராசனம் விருது வழங்கும் விழா சபரிமலையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று காலை நம்பியார் மண்டபத்தில் அமைந்துள்ள விழா மேடையில் வழங்கப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel