மும்பை
பிரபல பாலிவுட் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வாஜித் கான சிறுநீரக தொற்று காரணமாக உயிர் இழந்தார்.
பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வாஜித் கான 42 வயது இளைஞர் ஆவார். இவர் சஜித் உடன் இணைந்து சஜித் – வாஜித் என்னும் பெயரில் பல பாலிவுட் படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் கியா தோ டர்னா க்யா’ என்னும் படத்தின் மூலம் இருவரும் அறிமுகமாகிப் பல படங்களில் பணி புரிந்துள்ளனர்.
இவர்கள் சல்மான் கான்நடித்த வாண்டட், தபாங், ஏக் தா டைகர் உள்ளிட்ட படங்களில் பணி புரிந்துள்ளனர். சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோருக்காக வாஜித் கான்பின்னணி பாடல்கள் பாடி உள்ளார். வாஜித் கானுக்கு சிறுநீரக பிரச்சினை இருந்த்தா மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்.
சில நாட்கள் முன்பு மும்பையின் செம்பூர் பகுதியில் உள்ள குரானா மருத்துவமனையில் வாஜித் கான் அனுமதிக்கப்பட்டார், சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
இவருடைய மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.