ஐதராபாத்
பிரபல கன்னட நடிகை ஷோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 வயதாகும் நடிகை ஷோபிதா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏ.டி.எம்., ஜாக்பாட் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷோபிதா ‘மீனாட்சி மதுவே, கோகிலே’ போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார்.
ஷோபிதா நடித்த ‘பிரம்ம கன்டு’ தொடர், அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷோபிதா, ஐதராபாத்தில் குடியேறினார்.
நேற்று ஷோபிதா அவரது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஷோனிதா தற்கொலை செய்துகொண்டாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியாதநிலையில்,காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை ஷோபிதா இறந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.