டெல்லி
விளையாட்டை விட அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்று காரணமாக இம்மாதம் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் இந்த நிலைதான்.
இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய சுரேஷ் ரெய்னா விடம் ஐபிஎல் போட்டிகளின் நிலை பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அது குறித்து பதிலளித்த ரெய்னா, “ஐபிஎல் போட்டிகள் முக்கியமான ஒன்று தான் . ஆனால் தற்போதைய சூழலில் அதை விட என் குடும்பம்தான் முக்கியம். இது அனைவருக்கும் பொதுவாகும்.
நாம் அனைவரும் விவேகமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள்.
உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். பலரும் ஐபிஎல் பற்றி கேட்கிறார்கள். எனக்கும் விளையாட்டு முக்கியம்தான் ஆனால் குடும்பத்தின் பாதுகாப்பு அதைவிட முக்கியம். இந்நெருக்கடியான சூழலை நாம் அனைவரும் பாதுகாப்பாக ஒன்றிணைந்து வெல்வோம்” என நாட்டு மக்களை சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.