பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த யோகி ஆதித்யநாத்,  மகா கும்பமேளாவில் தண்ணீர் மாசுபட்டதாக வெளியான செய்திகளை   நிராகரித்து உள்ளதுடன்,  இது தவறான பிரசாரம், என்று கூறியதுடன் திரிவேணி சங்கம்   நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாதுகாப்பானது என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார்.

பிரயாகராவில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு வரும் 26ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த விழா முடிவடைய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அங்குள்ள ஆற்று நீர் குளிக்க உகந்தது அல்ல என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாக செய்திகள் பரவி வருகின்றன. பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  மேலும் இதனால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தண்ணீர் மாசுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை கவலை தெரிவித்தார்.

பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கும் குடிப்பதற்கும்  ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதுடன்,  இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம். சனாதன தர்மத்திற்கு எதிராக பொய்யான  வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து குழாய்கள் மற்றும் வடிகால்களும் டேப் செய்யப்பட்டுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட பின்னரே தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும்,  கங்கையும் மகா கும்பமேளாவும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றதுதான். ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. இது சமூகத்திற்கானது. அரசு, ஒரு ஊழியராக தனது கடமையை மட்டுமே செய்கிறது. இந்த முறை மகா கும்பமேளாவுக்கு கடமைகளைச் செய்யும் பொறுப்பு, நமக்கு கிடைத்திருக்கிறது.

“உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து நீரின் தரத்தை கண்காணித்து வருகின்றன,  மகா கும்பமேளாவை அவதூறு செய்வதற்காக மட்டுமே பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டது,”  எதிர்க்கட்சிகள்  “தவறான பிரச்சாரத்தை” பரப்பி, “மக்களை தவறாக வழிநடத்த” முயற்சிப்பதாகக் கூறினார். என்று அவர் மேலும் கூறினார்.

ஏற்கனவே உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  ஜனவரி 12, 13, 15, 19, 20 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கங்கை மற்றும் யமுனையின் பல்வேறு இடங்களிலிருந்து CPCB நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்திதாகவும்,  “ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சங்கம் மூக்கில் மலக் கோலிஃபார்ம் அளவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பிற்குள், 100 மில்லிக்கு 2,500 MPN க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது என்று உ.பி. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், உத்திரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) புதன்கிழமை சங்கத்தில் உள்ள நீரின் தரம் குறித்த புதிய அறிக்கையை NGT-யிடம் சமர்ப்பித்தது, அதில் மலக் கோலிஃபார்ம் அளவு 2,400MPN/100ml ஆக இருந்ததால் அது குளிப்பதற்கு ஏற்றதாக இருந்தது. “நீர் மாதிரி அறிக்கையின்படி சங்கத்தில் உள்ள நீரின் தரம் குளிப்பதற்கு ஏற்றது. மலக் கோலிஃபார்மின் அளவு 2,400 mpn/100ml என பதிவாகியுள்ளது, இது பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளது” என்று UPPCB தலைவர் ரவீந்திர பிரதாப் சிங் கூறியதை சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பற்றி ஆதித்யநாத் குறிப்பிட்டு, 30 பேர் இறந்தனர், 36 பேர் காயமடைந்தனர் என்று கூறினார். ஒரு தனி சம்பவத்தில், ஏழு பக்தர்கள் இறந்தனர், இது முதல் முறையாக இரண்டாவது கூட்ட நெரிசல் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை மற்றும் பக்தர்களின் ஒழுக்கம் காரணமாக, நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் கூறினார்.

கங்கை மற்றும் யமுனை நதிகளின் தூய்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த முதல்வர், 2013 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில் – சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது – மாசு அளவு மிகவும் கடுமையாக இருந்தது என்றார். தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். தற்போது வரை 56 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 7 நாள்கள் விழா நடக்கவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.