வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமானிகள், தங்களை கொரோனா பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ள வேண்டும்.
இதன்படி மும்பையில் ஏர் இந்தியா விமானிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.
5 பேரும் ஆடிப்போய் விட்டனர்.
இந்த ஐவரும் கடைசியாக கடந்த மாதம் 20 ஆம் தேதிக்கு முன்னர் சீனாவுக்கு சரக்கு விமானத்தை இயக்கி இருந்தனர்.
அதன் பின் எந்த விமானத்தையும் இயக்கவில்லை. அவர்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் 5 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
அதன் முடிவு நேற்று வெளியானது.
‘’ 5 பேருக்கும் நெகடிவ்- அதாவது கொரோனா தொற்று இல்லை’’ என்று புதிய ரிசல்ட் சொல்லி இருப்பதால், 5 பைலட்டுகளும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
முதலில் பரிசோதனை செய்த கருவிகள், தவறு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்களை குழப்புவதற்காகவே இந்த சோதனை கருவிகள் அமையும் போல.