சென்னை: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும். எரிவாயு தட்டுப்பாடு என தவறான , பொய்யான தகவல்களை பரபரப்புபட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்தியஅரசு சார்பிலான நலத்திட்டங்கள் தொடக்க விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி வந்த மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர் களை சந்தித்தார்.
அப்போது மேற்கு ஆசியா போா் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையிலும், நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை . ஆனால் சில கட்சிகள் பொய் செய்திகளையும், தவறான செய்திகள் பரப்பி வருகின்றன என கூறினார். நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் என்டிஏ கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றும்; தமிழகத்தை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றும். ஜெயலலிதா காலத்தைப் போன்ற நல்லாட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும் என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சோ்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பாா். வரும் தோ்தலில் திமுகவைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றாா்
[youtube-feed feed=1]