டில்லி

ம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்கில் பாஜக தலைவர்களை ஆதரித்துப் பதிவு இடப்பட்டுள்ளது.

பல பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.    இவற்றை உண்மை என நம்பி பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.   இந்த போலிக் கணக்கு பக்கங்களில் பெரும்பாலும்  தவறான தகவல்கள் பதியப்படுகின்றன.  இதன் மூலம் உண்மையான பிரபலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அவ்வகையில் முகேஷ் அம்பானியின் மனைவியும் ஜியோ கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர்களில் ஒருவருமான நீடா அம்பானியின் பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.    அந்த கணக்கில் வரும் பதிவுகளில் பாஜக,  அக்கட்சியின் திட்டங்கள் மற்றும் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வந்தன.

தற்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை புகழ்ந்து பல பதிவுகள் வெளியாகின.   அத்துடன் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து புகழும் பதிவுகளும் அதில் இஸ்லாமியரைக் கடுமையாக சாடியும் பதியப்பட்டன.  இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி பல இஸ்லாமியர்கள் அந்தப் பதிவில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.    அத்துடன் பெரும்பாலானோர் இஸ்லாமியரைச் சாடி பதிவிட்ட நீடா அம்பானியின் ஜியோவிலிருந்து தாங்கள் விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் மற்றவர்களையும் இனி ஜியோ சேவையை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாவின் இந்த பதிவுகள் மற்றவர் மனதை புணடுத்துவதாக பலரும் தெரிவித்ததால் டிவிட்டர் நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்தது.  அதில் இது நீடாவின் பெயரில் தொடங்கப்பட்ட போலிக் கணக்கு எனவும் தெரிய வந்துள்ளது.   அத்துடன் நீடா டிவிட்டரை பயன்படுத்துவது இல்லை எனவும் தெரிய வந்தது.

டிவிட்ட்ர் நிர்வாகம் இந்த போலி கணக்கை தற்போது நீக்கி உள்ளது.   இந்த கணக்கை சுமார் 18000க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.

[youtube-feed feed=1]