சென்னை:
கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம் செய்ததாக 6பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட போலி டோக்கன் ஒன்றுக்கு ரூ.200 என குடி மகன்களிடம் விற்பனை செய்து கல்லா கட்டியது தெரிய வந்ததுள்ளது. இது தொடர்பாக 12 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தடைமீறி, டாஸ் மதுபானக் கடைகளை திறந்து, குடிமகன்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி அரசு. அதைத் தொடர்ந்து, மதுவாங்குவது தொடர்பாக 7 வண்ண டோக்கன் வழங்கப்படுவதாகஅறிவித்திருந்தது.
கடை இன்று காலை கடை திறக்கும் முன்பே, ஏராளமானோர் அதிகாலையிலேயே டோகன் பெற கியூவில் நின்ற பரிதாபம் நிக்ழந்தது. ஒருசில இடங்களில் இரவிலேயே சிலர் சென்று கடை முன்பு படத்து தூங்கி, காலையிலேயே டோக்கன் பெற காத்திருந்த அவலங்களும் அரங்கேறின.
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இருந்தாலும் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலம் இல்லாத காரணத்தால், அங்குள்ள 147 மதுபானக் கடைகளில் கொரோனா கண்டெய்ன்மென்ட் பகுதியில் உள்ள 13 கடைகள் தவிரத்து மற்ற கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றன.