போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு செல்வோர் அரசுக்கு அப்ளை செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்திருந்தது. இந்த விவகாரத்திலும் முறைகேடு நடைபெற்றதுதெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் போலி இ பாஸ் தயாரித்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக ஏராளமான புகார்கள் குவிந்து வந்தன. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில், போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த வருவாய்துறையை சேர்ந்த குமரன், உதயகுமார் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.