சென்னை:
போலியாக பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யும் திட்டம் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு ரத்து செய்யப்படுவது குறித்து, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், போலி பத்திரப்பதிவு ரத்து செய்யும் நடைமுறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.