லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்யா’ என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக வடக்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை மாநில முதல்வராக யோகியின் அலுவலகமும் டிவிட் மூலம் உறுதி செய்துள்ளது.

உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல மாவட்ங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. அதன்படி கடந்த 2018ட்ம ஆண்டு பைசாபாத் மாவட்டத் தின் பெயர், அயோத்தி மாவட்டம் என்று மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரையும் அயோத்யா என மாற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் லக்னோ ரெயில்வே கோட்டத்தில் உள்ள பைசாபாத் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் பெயர், ‘அயோத்யா கன்டோன்மெண்ட்’ என்று மாற்றப்பட்டுள்ளது என இதை வடக்கு ரெயில்வே  அறிவித்தது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது எனவும், உத்தரபிரதேச மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.