சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்திக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
தொகுதி மறுவரை குறித்து, “கூட்டு நடவடிக்கை குழுவின் தீர்மானங்களை நேரில் வழங்க பிரதமர் நேரம் வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னையில் கடந்த 22ஆம் தேதி நடந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தங்களிடம் வழங்கவுள்ளதாகவும், முக்கியமான பிரச்னையில் ஒன்றுபட்ட நிலைபாட்டை தெரிவிக்க நேரம் ஒதுக்கி தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் விரைவாக பதிலளிப்பார் என நம்புவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் திரு @நரேந்திர மோடி, உத்தேச எல்லை நிர்ணயம் தொடர்பான கவலைகள் குறித்து எங்களின் குறிப்பாணையை முன்வைக்க, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சேர்ந்து உங்களுடன் ஒரு சந்திப்பை நான் கோரினேன். இது சென்னையில் நடந்த #நியாயமான எல்லை நிர்ணயத்திற்கான #கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து. முன்னர் குறிப்பிட்டது போல, நமது மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் நமது ஒன்றுபட்ட நிலைப்பாட்டைத் தெரிவிக்க உங்கள் நேரத்தை அவசரமாக நாடுகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.