மாஸ்கோ
மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய முதல் இரு தகவல்கள் இதோ :
ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன. இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம். அந்த 40 ல் முதல் இரு தகவல்கள் இதோ :
1. இந்தப் போட்டிகளில் பல நாடுகள் தொடர்ந்து பங்கேற்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்றுள்ள நாடுகளும் உள்ளன. அவை வேல்ஸ், ஜமைக்கா, கியூபா, குவைத், ஈராக், இந்தோநேசியா, ஹைதி மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆகும்
2. தற்போது இந்தப் போட்டிகள் ரஷ்ய நாட்டில் நடைபெற உள்ளது. ரஷ்ய நாடு ஐரோப்பா மற்றும் ஆசியா அகிய இருகண்ட்ங்களில் உள்ளது. எனவே இந்த முறை இது இரு கண்டத்தில் நடைபெறும் போட்டி என அழைக்கப்படுகிறது
அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்